பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேப்போல வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.