மீண்டும் மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை… இன்று ஒரே நாளில் ரூ.120 அதிகரிப்பு… சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
30 January 2024, 10:27 am

மீண்டும் மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை… இன்று ஒரே நாளில் ரூ.120 அதிகரிப்பு… சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், இந்த மாத இறுதியில் தங்கத்தின் விலை பெரும்பாலும் ஏறுமாகவே இருந்து வருகிறது. நேற்று ரூ.40 அதிகரித்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,860-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!