மளமளவென சரிந்தது தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.232 குறைவு… வாடிக்கையாளர்கள் குஷி…!!

Author: Babu Lakshmanan
1 November 2023, 12:10 pm

வார இறுதியில் அடிச்சு தூக்கிய தங்கம் விலை… புதிய உச்சமாக ரூ.46 ஆயிரத்தை கடந்து விற்பனை… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை இன்று (நவ.01) சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.29 குறைந்து ரூ.5686-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ1.20 காசுகள் குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.77,000-க்கு விற்பனையாகிறது.

  • Jailor 2 cast and crew ஜெயிலர் 2-வில் சிவராஜ்குமாருக்கு பதில் இவரா…ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்..!