பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.44 ஆயிரம், ரூ.45 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்ந்தே காணப்பட்ட தங்கத்தின் விலை, ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில் இருந்தே சற்று சரிந்து வந்தது. ஆனால், போகப் போக புதிய உச்சத்தை எட்டி வந்தது. சென்னையில் நேற்று உயர்ந்து காணப்பட்டிருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.5,650க்கும் விற்பனையாகிறது.
அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 குறைந்து ரூ.81,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
This website uses cookies.