‘இதை விட வேற சான்ஸ் கிடைக்காது’… இன்று கிடுகிடுவென குறைந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
15 April 2024, 11:26 am

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை, வார தொடக்க நாளான இன்று குறைந்துள்ளது.

அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.6790க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.54,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ‘மைக், லைட் ஆஃப் பண்ணியாச்சு’.. நள்ளிரவில் அண்ணாமலை வாக்குவாதம்… சூலூர் போலீசார் வழக்குப்பதிவு

ஆனால், வெள்ளியின் விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.89.50க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.500 உயர்ந்து ரூ.89,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…