புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்று ஒரே நாளில் ரூ.840 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
6 April 2024, 9:58 am

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்று ஒரே நாளில் ரூ.840 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த வாரம் ரூ.52 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை ரூ.280 குறைந்த நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை… கோவையில் விடிய விடிய ரெய்டு..!!

அதேபோல, வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.87க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.2000 உயர்ந்து ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 299

    0

    0