இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 11:01 am

இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.45,920க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,740-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 79.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.79,200-க்கு விற்பனை ஆகிறது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!