மீண்டும் எகிறிய தங்கத்தின் விலை… கிராம் ரூ.6 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை ; வாடிக்கையாளர்கள் ஷாக்..!!!

Author: Babu Lakshmanan
28 December 2023, 12:15 pm

மீண்டும் எகிறிய தங்கத்தின் விலை… கிராம் ரூ.6 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை ; வாடிக்கையாளர்கள் ஷாக்..!!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 அதிகரித்து ரூ. 5,945 ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 5 ஆபரணத் தங்கம் ரூ. 360 உயர்ந்து ரூ.47,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, தூயதங்கம் ஒரு கிராம் தங்கம் விலை 6,365 ரூபாய்க்கும், சவரனுக்கு 50,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தைப் போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 81 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!