Gold and Silver rate ; புதிய உச்சத்தில் தங்கம் விலை… ரூ.52 ஆயிரத்தை எட்டி விற்பனை ; அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 10:00 am

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.50 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை ரூ.200 குறைந்த நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: சேலம் கடை வீதியில் வாக்குசேகரித்த இபிஎஸ்… கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய வியாபாரிகளை கண்டு நெகிழ்ச்சி..!!

அதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.84க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 ஆயிரம் அதிகரித்து ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2293

    0

    0