தொடர்ந்து உச்சம் பெறும் தங்கம் விலை… இன்று மீண்டும் விலை உயர்வு… சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
20 March 2024, 12:10 pm

இதுக்கு ஒரு END இல்லையா… மீண்டும் உயர்ந்த தங்கம் விலை : அதிரடி விலை ஏற்றத்தால் பெண்கள் ஏமாற்றம்!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்தது. இந்த நிலையில், இன்றும் சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ6,140க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.49,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,030க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.40,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.00க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!