மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இந்த முறை ரூ.50 ஆயிரத்தை தாண்டுவது உறுதி ; அதிர்ச்சியில் ஆபரண பிரியர்கள்..!!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 10:44 am

மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இந்த முறை ரூ.50 ஆயிரத்தை தாண்டுவது உறுதி ; அதிர்ச்சியில் ஆபரண பிரியர்கள்..!!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் எகிறியுள்ளது.

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.6,205க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு ரூ.5,083க்கும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.40,664க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து வெள்ளி ரூ.80.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.80,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 248

    0

    0