இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. அடுத்தடுத்து அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
21 October 2023, 11:43 am

இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. அடுத்தடுத்து அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,360க்கும், கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,670க்கு விற்பனையாகிறது. அதேபோல 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.72 அதிகரித்து ரூ.37,160 ஆகவும் ஒரு கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ரூ.4,645 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 20 காசுகள் அதிகரித்து ரூ.78.70 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 1102

    0

    0