பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
இந்த நிலையில், நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.43,960-க்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி 76 ரூபாய் 20 காசுகளாக விற்கப்பட்ட நிலையில், கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 75 ரூபாய் 70 காசுகளாக விற்கப்படுகிறது.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.