தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
21 July 2023, 11:22 am

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.82க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 82,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!