அதிர்ச்சியுடன் தொடங்கிய மார்ச் மாதம்… தொடரும் தங்கம் விலை உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
1 March 2024, 11:33 am

அதிர்ச்சியுடன் தொடங்கிய மார்ச் மாதம்… தொடரும் தங்கம் விலை உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மார்ச் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ. 4,784-க்கும் சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.38,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 5102

    0

    0