பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து 4,608 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 36,864 ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித்…
முதல்முறையாக சிம்பொனியை 36 நாட்களில் உருவாக்கி அதை லண்டனில் அரங்கேற்ற உள்ளார் இசைஞானி இளையராஜா. இது இந்திய நாட்டுக்கே பெருமையான…
தென்காசி அருகே தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்து…
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவும் வலம் வருகிறார். ரஜினி, கமல்,…
சென்னையில் இன்று (மார்ச் 6) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 20…
This website uses cookies.