பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,480 ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.43,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,489 ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.35,912 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்:…
This website uses cookies.