இந்த ஜென்மத்துல நகை வாங்க முடியாது போல… ரூ.42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 11:16 am
Quick Share

2023ம் ஆண்டின் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து விற்பனையாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை தொட்டும் விற்பனையாகி, ஆபரண பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 21ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை நெருங்கும் வகையில் சென்றது.

2022ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 41 ஆயிரத்தை தாண்டியது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.5,228ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 824ஆக ஏற்றம் கண்டுள்ளது.

வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ஒரு ரூபாய் குறைந்து, ரூ.74.00ஆக சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.74,000 ஆக குறைந்துள்ளது.

புத்தாண்டு பிறந்த நிலையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 460

    0

    0