பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.44 ஆயிரம், ரூ.45 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்ந்தே காணப்பட்ட தங்கத்தின் விலை, ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில் இருந்தே சற்று சரிந்து வந்தது. ஆனால், போகப் போக புதிய உச்சத்தை எட்டி வந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,650க்கும் விற்பனையாகிறது.
அதேபோல, வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000 எனவும் விற்பனையாகிறது. இதன்மூலம், 23ம் தேதி அட்சய திருதிக்கு தங்கம் வாங்க நினைத்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
This website uses cookies.