வார இறுதியில் மீண்டும் உச்சம் பெற்ற தங்கம் விலை… நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
27 April 2024, 10:46 am

வார இறுதியில் மீண்டும் உச்சம் பெற்ற தங்கம் விலை… நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

மேலும் படிக்க: அமெரிக்காவில் கோவை மாணவி திடீர் கைது… பல்கலை.,யில் நுழையவும் தடை விதித்து அதிரடி..!!

இந்த நிலையில், தங்கம் விலை 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.87.50க்கும், ஒரு கிலோ ரூ.500 சரிந்து ரூ.87,500க்கும் விற்பனையாகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!