நீதிமன்றங்களில் நேரடி விசாரணை கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம் : மாநிலம் தழுவிய போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
2 February 2022, 5:10 pm

சென்னை : நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் விசாரணை நடைபெற்று வரக்கூடிய காரணத்தினால், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயநீதிமன்ற வளாகத்தின் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

அப்போது, கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு சென்னை உயநீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்புவரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. டாஸ்மாக், மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயக்கும் போது, நீதிமன்றங்களில் மட்டும் நேரடி விசாரணைக்கு அனுமதி மறுப்பது ஏன்…? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மறுக்கப்பட்டதாலும், 2020 முதல் 2022 வரை நீதிமன்றங்கள் மூடியதாலும் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பாதிக்கபட்ட வழக்கறினர்களுக்கு தமிழக அரசும், பார் கவுன்சிலும் 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 1341

    0

    0