சினிமா படத்தை மிஞ்சிய கடத்தல் சம்பவம்… வடமாநிலத்தில் இருந்து சென்னை வந்த 10 கிலோ கஞ்சா : 3 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
26 September 2022, 5:07 pm

சென்னை அருகே ஓட்டேரியில் ரயில் மூலம் வட மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.

இன்று காலை 6 மணி அளவில் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு திருப்பூராவிலிருந்து வந்த ரயிலில் மூன்று வட மாநிலத்தவர்கள் இறங்கி வந்து ஜமாலையா வழியாக பார்சலுடன் ஆட்டோ மூலம் கிளம்பிச் சென்றனர். இதனை பார்த்த போலீசார் உடனடியாக ஓட்டேரி பிரிட்ஜ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் குறிப்பிட்ட ஆட்டோவை மடக்கிய போலீசார் சோதனை செய்த போது, அதில் இரண்டு பண்டல்களில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைஅடுத்து, ஆட்டோவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் ஆட்டோவில் இருந்த மூன்று வடமாநிலத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திரிபுர மாநிலத்தைச் சேர்ந்த சுகன்டா தாஸ் (26), லிட்டன் நமா (30), பிரசன்ஜித் டேட்டா (28) என்பது தெரியவந்தது. இவர்கள் திரிபுராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து தொலைபேசி மூலம் யாரிடம் கொடுக்க சொல்கிறார்களோ, அவர்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 488

    0

    0