ரூ.350 கோடி மிச்சம் இருக்கு.. கொஞ்சம் கேட்டு வாங்கி கொடுங்க.. பாஜக கவுன்சிலருக்கு மேயர் பிரியா பதில்!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2025, 5:42 pm

சென்னை மாநகராட்சிக்கு ரூ.350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விவாதம் எழுந்தது. இதில் பங்கேற்று பேசிய பாஜக கவுன்சிலர, சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் என்பது நிதி பற்றாகுறையில் உள்ள பட்ஜெட்டாக உள்ளது என கூறினார்.

இதையும் படியுங்க: ஒருவேளை திமுகவின் கணக்கு தப்பாகிவிடும்.. கணித்த வானதி சீனிவாசன்!

மேலும் சொத்து வரிகள் உள்ளிட்ட வரிகள் நிதி பற்றாக்குறையில் உள்ள பட்ஜெட்டாக உள்ளது என கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே சென்னைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவேம் என மத்திய அரசு கூறியுள்ளதாகவும், சொத்து வரியை வருடா வருடம் உயர்த்துவதால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக கூறினார்.

Chennai Mayor Priya Replied To BJP Councillor

இருந்தாலும் சொத்து வரி 6 சததீம் உயர்த்தப்பட்டு ஆவணங்களும் சமர்பிக்கப்ப்டட நிலையில் தற்போது வரை சென்னை மாநகராட்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார். உங்கள் கட்சி சார்பாக நீங்களே அதனை வாங்கித் தருமாறு மாநகராட்சி மேயர் பிரியா பதில் அளித்தார்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!