“நீட் தேர்வு திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது”-எம்.பி கனிமொழி ஆதங்கம்!
நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட உள்ளது என்ற தீர்மானம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி தெரிவித்ததாவது,
நீட் தேர்வு என்பது திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது.நீட் தேர்வு தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு அல்ல.வசதி வாய்ந்த மாணவர்களின், நகர்ப்புற மாணவர்களின், பயிற்சி வகுப்புக்கு செல்லக்கூடிய மாணவர்களின், வாழ்க்கைக்கு மட்டுமே உகந்ததாக உள்ளது.கிராமப்புற மாணவர்கள்,ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு எதிரி ஆகத்தான் இருக்கிறது. மேலும் இந்த நீட் தேர்வு லட்சக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம திமுக அரசுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.நீட் தேர்வு ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.நிச்சயம் இந்த முறை நீட் தேர்வுகளுக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று தெரிவித்தார்.