பெண்களை துரத்திய திமுக கட்சி கொடி பொருந்திய கார்? வைரலான வீடியோ : போலீஸ் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2025, 7:03 pm

சென்னை ஈசிஆர் சாலையில் 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற காரை மற்றொரு கார் துரத்தியது.

அந்த காரில் 4 பேர் கொண்ட இளைஞர்கள் இருந்தனர். மேலும் இளைஞர்கள் வந்த காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால் திமுக மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன.

இதையும் படியுங்க : நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய கருக்கா வினோத்.. பரபரப்பான நிமிடங்கள்!

இது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) அன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சென்னை ஈசிஆர் முட்டுக்காட்டு படகு குழாம் பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரத்தை பார்க்க, 4 இளைஞர்கள் ஒரு காரில் வந்துள்ளனர்.

அற்போது அந்த இளைஞர்கள் நிறுத்திய காரின் பின்னால் மற்றொரு கார் நின்றிருந்தது. அதில் 4 பெண்கள், 2 ஆண்கள் இருந்தனர். அப்பேது பெண்கள் வந்த கார் முதலில் புறப்படும் போது முன்னால் நின்று கொண்டிருந்த இளைஞர்களின் காரை லேசாக உரசியதாக கூறப்படுகிறது.

மேலும் மன்னிப்பு கேட்காமல் பெண்கள் சென்ற கார் புறப்பட்டு சென்றதால், அந்த காரை இளைஞர்கள் துரத்தியுள்ளனர். அந்த கார் ஈசிஆரில் பின்தொடர்வதை பார்த்த பெண்கள் அலறியுள்ளனர்.

மேலும் தங்கள் செல்போனில் அதை வீடியோவாக எடுத்து போலீசுக்கு தகவல் அளத்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டு கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

chennai Police Explain about Car Chase Womens

புகாரை பெற்ற போலீசார் நடத்திய விசாரணையில், பெண்கள் சென்ற கார் இளைஞர்கள் சென்ற காரை உரசியதாகவும், அதற்கு நியாயம் கேட்க இளைஞர் காரை நிறுத்த சொல்லியும், பெண்கள் காரை நிறுத்தாமல் செற்தகாவும், அதனால் அவர்கள் துரத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

பெண்கள் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், இளைஞர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். இது குறித்து கேளம்பாக்கம் உதவி ஆணையாளர் வெங்கடேசன், கானத்தூர் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து இளைஞர்கள் போலீசார் தேடிவருகின்றனர். இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Actor Bala helps actress Bindhu Ghosh பெத்த பிள்ளை கூட கண்டுக்கல..கண்ணீரில் பிரபல நடிகை..ஓடி சென்று உதவிய KPY பாலா.!