கஞ்சா போதையில் தகராறு… காவலரை கத்தியுடன் துரத்திய இளைஞர்கள் ; சென்னையில் பகீர் சம்பவம்.. ஷாக் வீடியோ!!!!

Author: Babu Lakshmanan
22 August 2023, 6:15 pm

சென்னையில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், கத்தியுடன் காவலரை துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த திருமாவளவன், நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். அப்போது, கஞ்சா போதையில் இருந்த 3 பேர் சாலையில் அவரை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், தாக்கியும் உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன் உடனடியாக வந்தார்.

அங்கு பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது, போலீஸ்காரர் என்று கூட பார்க்காமல், கஞ்சா போதையில் இருந்த நபர், சிறிய கத்தியால் தன்னைக் கிழித்துக் கொண்டதோடு, காவலரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தியுடன் துரத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர் சரவணன் அங்கிருந்து தப்பியோடினார்.

இதைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி போலீசார், கஞ்சா போதையில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதில் காவலரை கஞ்சா போதை ஆசாமிகள் மிரட்டிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 366

    0

    0