அஸ்திவாரம் தோண்டிய தனியார் நிறுவனம்… அதிர்வு தாங்காமல் இடிந்து விழுந்த வீடுகள் ; நடுத்தெருவில் தவிக்கும் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 2:56 pm

சென்னையை அடுத்த பெருங்குடியில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் தோண்டப்பட்ட குழியால் அருகே இருந்த வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.

சென்னை பெருங்குடி பர்மா காலனி திருவள்ளுவர் நகர் 10வது தெருவில் அரியண்ட் பில்டர்ஸ் நிறுவனம் தரைதளம் மற்றும் 4 அடுக்கில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுமார் 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளனர்.

இதனால் அருகில் உள்ள இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு 5 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. மேலும், பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை. இருப்பினும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தங்களது உடமைகளை வெளியில் எடுத்து வந்து தெருவில் வைத்து விட்டு செல்ல இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கிட்டு வருகின்றனர். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு சென்றார்.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?