சென்னையை பரபரப்பாக்கிய வெடிகுண்டு மிரட்டல்… பதற்றத்தில் பெற்றோர்கள்… தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
8 February 2024, 2:34 pm

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வளாகங்களுக்கு முன்பு பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னை அண்ணாநகர், ஜேஜே நகர் மற்றும் கோபாலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், வாட்ஸ் அப் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாகவும் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டன. இதனால், பதற்றத்தில் ஒரே சமயத்தில் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு குவிந்தனர். இதன் காரணமாக சென்னையில் பரபரப்பு நிலவியது.

[email protected] என்ற இமெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், அதனை செய்தது யார்..? எதற்காக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது என்று குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெற்றோர்கள் பதற்றப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சந்தேகத்திற்கிடமாக எந்தப் பொருளும் சிக்கவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளின் இ-மெயில் ஐடிகளை சேகரித்து ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி