சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வளாகங்களுக்கு முன்பு பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை அண்ணாநகர், ஜேஜே நகர் மற்றும் கோபாலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், வாட்ஸ் அப் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாகவும் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டன. இதனால், பதற்றத்தில் ஒரே சமயத்தில் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு குவிந்தனர். இதன் காரணமாக சென்னையில் பரபரப்பு நிலவியது.
johnsol01@gmail.com என்ற இமெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், அதனை செய்தது யார்..? எதற்காக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது என்று குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெற்றோர்கள் பதற்றப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சந்தேகத்திற்கிடமாக எந்தப் பொருளும் சிக்கவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளின் இ-மெயில் ஐடிகளை சேகரித்து ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.