இதுவரை 7.18 லட்சம் பேருக்கு உணவு.. தமிழக அரசு தகவல்!

Author: Hariharasudhan
16 October 2024, 1:50 pm

சென்னையில் விடாது பெய்த கனமழையின் இடையிலும் ஆவின் பால் எவ்வித தடையுமின்றி விற்பனை செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை மாநகரில் நேற்று (அக்.15) தொடர்ந்து 131 மி.மீ. அளவிற்கு அதிகமாக மழை பொழிந்ததால், 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும், வருவாய்த் துறையும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமும் உள்ளிட்ட துறைகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றும் பணியினை மேற்கொண்டன.

மேலும், கணேசபுர சுரங்கப்பாதையில் தற்போது தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் 20 செ.மீ. மழைபொழிந்தால் ஒரு வாரத்திற்கு மேல் தேங்கிய மழைநீர் அகற்றும் சூழ்நிலை இருந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

CHENNAI

இம்முறை பருவமழையினை எதிர்கொள்ள 1.223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, மழைநீர் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கிய 542 இடங்களில், 412 இடங்களில் உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டு, மீதமுள்ள இடங்களிலும் மழைநீர் அகற்றும் பணி துரிதமாக நடைறுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பருவம் தவறிய மழை பொழிவுக்கு காரணம் இளைஞர்கள்தான்.. மதுரை ஆதீனம் கருத்தால் சலசலப்பு!

இதற்காக சென்னை மாநகராட்சியில் 21,000 களப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி மேற்கொண்டனர். சென்னையில் நேற்று 100 மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

அதேபோன்று பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி அனைத்துப் பகுதிகளுக்கும் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று காலை உணவு 1,000 நபர்களுக்கும், மதிய உணவு 45.250 நபர்களுக்கும், இரவு உணவு 2,71,685 நபர்களுக்கும், இன்று (அக்.16) காலை உணவு 4,16,000 நபர்களுக்கும் என மொத்தம் 7.18,885 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 82

    0

    0