சென்னையில் மனம் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை மற்றொரு ரவுடி கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூலக்கொளத்தைச் சேர்ந்தவர் குண்டு சதீஷ் என்று அழைக்கப்படும் சதீஷ். பிரபல ரவுடியான இவர் மீது காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக ரவுடிசம் ஏதும் செய்யாமல் மனம் திருந்தி வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உட்வார்ப் கால்வாய் ஓரம் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற ஏழு கிணறு போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட குண்டு சதீஷ் என்பது தெரிய வந்தது. மேலும், திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி சதீஷ், போலீசாரின் இன்ஃபார்மர் என்ற சந்தேகம் மற்ற ரவுடி கும்பலுக்கு எழுந்திருக்காலம் என்றும், இதன் காரணமாக அவரை படுகொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல், இட்டா அஜித் தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பலுக்கு சதீஷின் கொலை சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.