பள்ளி மாணவியுடன் அடிக்கடி உல்லாசம்.. காதலித்த 60 நாளில் கர்ப்பமாக்கிய காதலன்… பாய்ந்தது போக்சோ..
Author: Babu Lakshmanan21 March 2022, 5:06 pm
சென்னை : பள்ளி மாணவியுடன் அடிக்கடி உல்லாசத்தில் இருந்து கர்ப்பமாக்கிய காதலனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல்லாவரத்தை அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, இது பற்றி மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் சொன்ன தகவல்களால் அவர்கள் ஆடிப்போய் விட்டனர். பின்னர், இது தொடர்பாக குன்றத்தூர் போலீஸில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், குன்றத்தூர் பகுதியில் பூச்செடி விற்பனை கடையில் வேலை செய்து வந்த விக்னேஷ் என்னும் 22 வயது இளைஞருக்கும், அந்த வழியாக பள்ளிக்கும் செல்லும் இந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
கடந்த 5 மாதங்களாக வீட்டில் யாரும் இல்லாத போது, சிறுமியை அழைத்துச் சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் தான் 4 மாதம் கர்ப்பம் அடைந்தார் என்பது உறுதியானது. இதையடுத்து விக்னேஷை கைது செய்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.