கொடைக்கானல் வனப்பகுதியில் பாதி உடல் கருகிய நிலையில் உயிருடன் சென்னை வாலிபர் மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2023, 4:14 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் வந்துள்ளார் .

தொடர்ந்து அப்சர்வேட்டரி பகுதியில் விறகு எடுக்கச் செல்லும் பெண்கள் உடலில் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் வனப்பகுதியில் இருக்கிறார் என கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .

தொடர்ந்து ஜெகதீஸ்வர் உடலில் தீ காயங்களுடன் உடலில் துணிகள் இன்றி இருந்துள்ளார் . தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உடல் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் ஜெகதீஸ்வர் தற்கொலைக்கு தானாக முயன்றாரா இல்லை யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

மேலும் அவருக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 407

    0

    0