புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… 3வது நாளாக இன்றும் கிடுகிடு விலை உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!
Author: Babu Lakshmanan6 March 2024, 11:16 am
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… 3வது நாளாக இன்றும் கிடுகிடு விலை உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.
மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,040க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.48,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து கிராம் ரூ.78.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.