வார இறுதியில் மகிழ்ச்சியை கொடுத்த தங்கம் விலை… இன்று ஒரே நாளில் ரூ.160 குறைவு….!!
Author: Babu Lakshmanan3 February 2024, 11:36 am
வார இறுதியில் மகிழ்ச்சியை கொடுத்த தங்கம் விலை… இன்று ஒரே நாளில் ரூ.160 குறைவு….!!
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,870க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.4,808-க்கும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,464-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.77.00க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.