வார இறுதியும் அதுவுமா இப்படியா..? இன்றும் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை ; வாடிக்கையாளர்கள் அப்செட்..!!
Author: Babu Lakshmanan20 January 2024, 12:48 pm
வார இறுதியும் அதுவுமா இப்படியா..? இன்றும் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை ; வாடிக்கையாளர்கள் அப்செட்..!!
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்த நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,825க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,772க்கும், சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.38,176க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.00க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
.