2023ம் ஆண்டின் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை தொட்டும் விற்பனையாகி, ஆபரண பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 21ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை நெருங்கும் வகையில் சென்றது.
2022ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 41 ஆயிரத்தை தாண்டியது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூ.5,345ஆகவும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 760ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து, ரூ.74.60ஆக சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 சரிந்து, ரூ.74,600 ஆக குறைந்துள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.