மீண்டும் ஆட்டத்தை காட்டும் தங்கம் விலை… இறங்கிய வேகத்தில் ஏறுவதால் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
29 February 2024, 10:55 am

மீண்டும் ஆட்டத்தை காட்டும் தங்கம் விலை… இறங்கிய வேகத்தில் ஏறுவதால் அதிர்ச்சி…!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ரூ.40 குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 40 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5 உயர்ந்து 5 ஆயிரத்து 815 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 20 காசுகள் உயர்ந்து 75.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.75,700-க்கும் விற்பனையாகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!