வாரத் தொடக்கத்திலேயே இப்படியா..? தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
22 January 2024, 11:13 am

வாரத் தொடக்கத்திலேயே இப்படியா..? தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றம், இறக்கத்தை சந்தித்து வருகிறது.

சென்னையில் கடந்த வார இறுதியில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,830க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.4,776க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.38,208க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.77.00க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 4460

    0

    0