2வது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
4 May 2024, 10:18 am

2வது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

மேலும் படிக்க: நள்ளிரவில் பரபரப்பு.. சவுக்கு சங்கர் திடீர் கைது… கோவை போலீசார் அதிரடி!!

இந்த நிலையில், தங்கம் விலை 2வது நாளாக இன்றும் மளமளவென குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,600க்கும், சவரனுக்கு ரூ.120 சரிந்து ஒரு சவரன் ரூ.52,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86,500க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.86,500க்கும் விற்பனையாகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!