வரலாற்றில் முதல்முறை… ரூ.48 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.680 அதிகரிப்பு..

Author: Babu Lakshmanan
5 March 2024, 10:55 am

வரலாற்றில் முதல்முறை… ரூ.48 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.680 அதிகரிப்பு..

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்றும் அதிரடியாக ரூ.680 உயர்ந்தது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.48,120 ஆக விற்பனையாகி வருகிறது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டி தங்கம் விற்பனை ஆகிறது. அதேபோல, ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசு அதிகரித்து 78 ரூபாய் 20 காசுகளாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.78,200-க்கு விற்பனையாகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!