இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
Author: Babu Lakshmanan5 April 2024, 11:05 am
இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த வாரம் ரூ.52 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று தங்கம் விலை ரூ.360 அதிகரித்த நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 சரிந்து ஒரு கிராம் ரூ.6,510க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.52,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: ஆதிதிராவிடர் நலவிடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ; 5 பள்ளி மாணவிகள் படுகாயம்…!!!
அதேபோல, வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.85-க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.