பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரத்தின் இறுதியில் உயர்ந்து காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,675க்கும், சவரனுக்கு ரூ.40 சரிந்து ரூ.45,400க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.78.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் ரூ.78,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.