அடப் போங்கப்பா..? மீண்டும் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
26 December 2023, 10:27 am

அடப் போங்கப்பா..? மீண்டும் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கிறிஸ்துமஸ் தினமான நேற்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,895க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.4,829க்கும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.38,632க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!