அட இதுகூட பரவாயில்லையே… வார இறுதியில் தங்கம் விலை என்ன தெரியுமா..?

Author: Babu Lakshmanan
27 January 2024, 11:01 am

அட இதுகூட பரவாயில்லையே… வார இறுதியில் தங்கம் விலை என்ன தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் இன்றும் 22 காரட் தங்கம், நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 5,830 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.4,784க்கும், ஒரு சவரன் ரூ.38,272க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.50க்கும் ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 1672

    0

    0