அடடே சூப்பர்… குதூகலமாகும் நகை பிரியர்கள்… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

Author: Babu Lakshmanan
28 ஆகஸ்ட் 2023, 12:07 மணி
Gold Rate - Updatenews360
Quick Share

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.

இந்த நிலையில்,தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்றும் அதே விலையே நீடிக்கிறது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் 5,480 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.43,840 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் 4,489 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.35,912 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Thiruma அந்த நிகழ்ச்சிக்கு விஜய் வந்தால் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. திருமாவளவன் ஓபன் டாக்!
  • Views: - 3077

    1

    1