எகிறிய வேகத்தில் குறைந்து வரும் தங்கம் விலை… இன்றும் அதிரடியாக குறைந்தது ; வாடிக்கையாளர்கள் குஷி!!

Author: Babu Lakshmanan
6 December 2023, 11:26 am

எகிறிய வேகத்தில் குறைந்து வரும் தங்கம் விலை… இன்றும் அதிரடியாக குறைந்தது ; வாடிக்கையாளர்கள் குஷி!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்திலிருந்து சுமார் ரூ.2,500 வரை உயர்ந்து காணப்பட்டது.

கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் ரூ.1000 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவாறு இன்றும் அதிரடியாக விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,815க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.46,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.4,763க்கும், சவரனுக்கு ரூ.232 குறைந்தும் ரூ.38,104க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.81.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.400 சரிந்து ரூ.81,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • goundamani shout actors in shooting spot ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…
  • Close menu