தொடர்ந்து 2வது நாளாக குறைந்த தங்கம் விலை… வார இறுதியில் வாடிக்கையாளர்கள் நிம்மதி…!!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 11:00 am

அப்பாடா.. நேற்று வரலாறு காணாத விலை உயர்வு.. இன்று சற்று ஆறுதல் : தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்திலிருந்து நேற்று முன்தினம் வரை வரலாறு காணாத வகையில், சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்துள்ளது.

ஆனால், இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், நேற்று தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை மளமளவென சரிந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ரூ.46,800க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து 82.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.82,500-க்கு விற்பனை ஆகிறது.

.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!