கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… 2024 முழுவதும் இப்படியா இருக்காதா..? நகை பிரியர்கள் ஏக்கம்..!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 11:21 am

கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… 2024 முழுவதும் இப்படியா இருக்காதா..? நகை பிரியர்கள் ஏக்கம்..!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் தங்கம் விலை நேற்று ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,915க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.47,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.4,845க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.38,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.00க்கும், ஒரு கிலோ ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?