இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை … ஒரே நாளில் ரூ.1000 குறைந்துவு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
5 December 2023, 2:32 pm

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… ஒரே நாளில் ரூ.1000 குறைவு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்திலிருந்து நேற்றைய தினம் வரை சுமார் ரூ.2,500 வரை உயர்ந்து காணப்பட்டது.

கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்றும் அதிகரித்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மளமளவென சரிந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 5ஆம் தேதி கிராமுக்கு ரூ.125 குறைந்து கிராம் ரூ.5,850க்கும், சவரனுக்கு ரூ.1000 குறைந்து சவரன் ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.102 குறைந்து ரூ.4,792க்கும், சவரனுக்கு ரூ.816 குறைந்து ரூ.38,336க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.90 குறைந்து ரூ.81.40க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1900 சரிந்து ரூ.81,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!